Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (10.11.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ …!!

மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தாராளமான பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். வெளி வட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். மதிப்பு கூடும். இன்று எல்லாமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று தொழிலில் புதுமையான யுக்திகளை கையாண்டு மனம் மகிழ்வீர்கள். அதேபோல சொத்து தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கூடுதல் கவனத்துடன் எதையும் செய்யுங்கள். மற்றவர்களை அணுகும் போது நிதானமாக செயல்படுங்கள்.

இன்று விஐபிக்களின் சந்திப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். மிக முக்கியமாக இன்று நீங்கள் யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் .அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான வேலைக்கு செல்லும்போது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு  தொடங்குங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய நமஸ் காரம் செய்து இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே.!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும்  தவிர்க்க முடியாததாக இருக்கும். உண்ணவும்  நேரமின்றி உழைப்பு அதிகமாகவே இருக்கும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். இன்று ஆன்மீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புகழ் ஓங்கும். அதேபோல தானம் தர்மம் போன்ற காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். இன்று செல்வாக்கு உயரும் நாளாகவும் இருக்கும்.

பணவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் இருக்கும். அது மட்டுமில்லாமல் தாராளமாக நீங்கள் வீண் செலவுகளை செய்யக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கி பண விரயம் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் கைகுட்டையாவது எடுத்துச் செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு சிறப்பை கொடுக்கும். விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் மிக சிறப்பை கொடுக்கும். தயவுசெய்து இதை செய்து நீங்கள் இன்றைய நாளை  சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக பண வரவு வரும். அதனால் உங்கள் மனம் பரவசப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளும் இன்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மற்றவரிடம் பண உதவி கேட்கலாம். இன்று நீங்கள் நினைத்தது ஓரளவு நடக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும்.

இன்று உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் ஒழுங்காக இருக்கும். எப்பொழுதுமே நீங்கள் புரிந்து கொள்வது ஒன்றே ஒன்று,  யாருக்குமே எந்தவிதமான ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். நல்ல வெற்றியையும் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக நன்மைகள் நடக்கக்கூடும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்க கூடும். வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறம்பட நீங்கள் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைகள் மட்டும் பாராட்டுக்களைப் பெறாது. இன்று மன உறுதி கொஞ்சம் வேண்டும். பழைய சொத்துகளை அடைவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர்நிலையில் உள்ளவருடன் மனவருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரலாம். மனைவி வழியில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதே போல் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் இருக்க கூடும். சரியான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

இன்று வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். வாகன செலவும் இன்று இருக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில் வியாபாரமும் நல்லபடியாக நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். அதேபோல பழைய நண்பர்களை நீங்கள் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். அதுபோலவே இன்று வெளியில் நீங்கள் செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். காரியங்கள் சிறப்பாக நடக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்களின் ஒற்றுமை இல்லாமையால் உறவுகளில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம். கூடுமானவரை இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்து விடுங்கள் அது போதும். இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடை தாமதம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். வீண் அலைச்சலும் இருக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு வீண் அலைச்சலை தரக்கூடியதாக இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களால் உங்களுக்கு காரியமும் நிறைவேறும். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

யாருக்கும் நீங்கள் கடன் கொடுக்காதீர்கள். நீங்களும் யாரிடமும் கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை பண பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தொழிலுக்காக மற்றவரிடம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த பணம் உங்கள் கையில் வந்து சேரும். அனைவரையும் நீங்கள் இன்று அனுசரித்துச் செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அது போதும். வெற்றியை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபடுங்கள். விநாயகரையும் வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் நினைத்ததெல்லாம் தடையின்றி நிறைவேறும். பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். இன்று எதிர்பாராத நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை இருக்கும். இன்று தொலைபேசி வழித் தகவலால் மகிழ்ச்சியான சம்பவங்களை நீங்கள் சந்திக்க கூடும். அதேபோல சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை இன்று நீங்கள் காதில் கேட்க கூடிய சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

கலகலப்பான சூழல் நிலவும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதே போல யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். விநாயகரை நீங்கள் மனதார வழிபட்டு இன்றைய  நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்மான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மூலமாக தனவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் தானாகவே முன்வந்து உதவிகளை செய்வார்கள். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் சிறப்பாக நடக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான வாய்ப்பு இன்று கிடைக்கும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக அமையும். அனைத்து காரியங்களும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

இன்று கொடுக்கல் வாங்கல்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி மேலாண்மை உயர்வதால் நீங்கள் சேமிக்கக் கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். காரிய வெற்றிக்கு அதுபோதும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபடுங்கள். அதேபோலவே விநாயகரையும் நீங்கள் மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். அதனால் கைமாற்றாக பிறரிடம் கடன் வாங்க நேரிடும். இன்று பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் கோபத்தின் காரணமாக சில வீண் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். பொறுமையை கையாண்டாலே இன்றைய நாள் நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அது உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அன்றைய வேலைகளை அன்றைய தினத்திலேயே முடித்துவிடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். மீண்டும் ஒருமுறை பொறுமையை மட்டும் கையாளுங்கள். குடும்பத்தாரிடம் பேசும் பொழுது மிகவும் நிதானமாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபடுங்கள். விநாயகரையும் வழிபட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இதுவரை இல்லாத அளவுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும். வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். நண்பர்கள் உதவி நன்மையை கொடுக்கும். இன்று சுகமான தூக்கம் வரும். பண வரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பகை பாராட்டியவர்கள்  பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்றைய நாள் அளவற்ற மகிழ்ச்சியில் திகழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும்.

அதே போல மற்றவர்களின் ஆதரவையும் பெற்று முக்கியப் பணியையும் நிறைவேற்றுவீர்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடும். இன்று திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் மென்மேலும் நீங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற முடியும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு செய்யுங்கள். விநாயகரையும் நீங்கள் மனமார வழிபட்டு இன்றைய நாளை மென்மேலும் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! எடுத்த காரியங்கள் தடை வருவதை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். எதையுமே நீங்கள் துணிந்து செய்யுங்கள் பார்த்துக்கொள்ளலாம். துணிந்து செயல்பட்டால் அனைத்துக் காரியமும் வெற்றியை  ஏற்படுத்தி கொடுக்கும். இன்று முயற்சி திருவினையாக்கும் முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இன்று வாக்கு வன்மையால் சில காரியங்களை நல்லபடியாக முடிப்பீர்கள். தயவு செய்து சரியாக புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. உடல் ஆரோக்கியத்தை யார் ஒருவர் சிறப்பாக வைத்துக் கொள்கிறாரோ அவர்களுக்கு இந்த உலகமே வசியமாகும். இது சித்தர்களின் வாக்கு. இன்று தொழில் வியாபாரம் கொஞ்சம் மந்தமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும்.

பணவரவு கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். வாகனம் வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். மீண்டும் ஒருமுறை பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நிதி நிலைமை உயர்வதற்கு கொஞ்சம் கடுமையாக உழைப்பீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனம் கொஞ்சம் நிம்மதியாக காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காரியங்கள் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே விநாயகரையும் வழிபட்டு இன்றைய  நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையை இன்று நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். வாழ்க்கையில் இன்று நீங்கள் புதிய திருப்பங்களை சந்திக்க கூடும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்கும். லாபத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். இருந்தாலும் கூடுதல் உழைப்பு மட்டும் இருக்கும் பார்த்துகொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். பெரியவரிடம் ஆலோசனை கேளுங்கள். இன்று நண்பர்கள் மூலமும் ஆதாயமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் எந்தவித குறையும் இருக்காது.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உங்களுடைய செயல் திறமை இன்று கூடும். அது போலவே தொழிலுக்காக நீங்கள் கேட்ட இடத்தில் பணம் உங்களுக்கு வந்து சேரும். இன்றைய நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். ஆதரவின்றி தவிர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து மகிழ்வீர்கள். அதாவது தானம் தர்மம் போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு செல்வாக்கு உயரும். இருந்தாலும் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே விநாயகரை இன்று மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அது போதும். வெற்றி வாய்ப்புகளை நாம் குவிக்க முடியும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பணத்தைப் பற்றிய பிரச்சினைகள் ஏதுமின்றி தன வரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டினால் மருத்துவ செலவுகள் ஏதும் இருக்காது. அதனால் மனம் மகிழும். உங்களுடைய வாக்கு வன்மையால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களிடம் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வீர்கள். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். துணிந்து காரியத்தை செய்வீர்கள். துணிச்சலாகவும் சில காரியங்களை எதிர்கொள்வீர்கள்.

அதேபோலவே பழைய கடன்கள் அடைபடும். கடன் பிரச்சினைகள் இன்று உங்களுக்கு இருக்காது. ஆனால் மிக முக்கியமாக பணத்தேவை இருக்காது. இன்று உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவரும் விதமாக நடந்து கொள்வீர்கள். அதுமட்டுமில்லை இன்று உங்கள் உடல் வசீகரம் பெறும். காதலில்  வயப்பட கூடிய சூழலும் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியைச் செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே இன்று விநாயகரையும் வழிபட்டு இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |