நடிகை ரிது வர்மா பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரிது வர்மா. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது தெலுங்கில் நாக சவுர்யா நடிப்பில் உருவாகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த வாரம் வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரிது வர்மா பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரிது வர்மாவிடம், திருமணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்களுக்கு திருமணம் எப்போது? என கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ரிது வர்மா, ‘இப்படிப்பட்ட கதைகள் எனக்கு எதேச்சையாக அமைந்து விடுகிறது. ஆனால் நிஜத்தில் இன்னும் 3, 4 வருடங்களுக்கு திருமணம் பற்றி பேச்சே கிடையாது. என் பெற்றோர் என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை’ என தெரிவித்துள்ளார்.