Categories
சினிமா தமிழ் சினிமா

”நடிகையை அடித்த விஷால்” மேடையில் மன்னிப்பு கேட்டார் …!!

‘ஆக்‌ஷன்’ சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. இதுவரை பெண்களை அடிக்காத நான் இந்தப் படத்தில் நடிகை அகன்ஷாவை பல தடவை அடித்தேன். இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்‌ஷன்’ படத்தில் இணைந்து நடித்த நடிகை அகன்ஷா பூரியை அடித்ததற்காக மேடையில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் விஷால்.அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணைக் கவரும்விதமான பிரமாண்ட காட்சிகளுடன் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா பூரி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படம் நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால் பேசியதாவது:

சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம்தான் முதலில் முக்கியம் என்று எனக்குப் புரியவைத்தது இயக்குநர் சுந்தர். சி. ‘சங்கமித்ரா’தான் சுந்தர்.சியின் கனவு திரைப்படம். ஆனால், அந்தப் படம் தாமதமானதால் இந்தப் படத்தை எடுத்துவிட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படம், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமாக ‘ஆக்‌ஷன்’. ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவை என் கண்ணால் பார்த்தேன்.

ஒரு காட்சியில் என் கைகளைக் தடுக்க கொண்டுவரும்போது அடிப்பட்டு ஐந்து மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவிடாமல் வரும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் இயக்குநர் சுந்தர். சியுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தனர். இதனால் ஒரு சாதாரண இடத்தையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கு இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. நடிகை அகன்ஷா பூரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இந்தப் படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ‘ஆக்‌ஷன்’ படத்தை தவறாமல் பெரிய திரையில் காணுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |