Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை,பணம் கொள்ளை…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் உள்ள உலகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மில் தொழிலாளி ஆவார். இவர் தற்போது எல்.ஐ..சி. ஏஜென்டாக உள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகருக்கு சென்று விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உலகராஜ் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த ரூ.14 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து உலகராஜ் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று உலகராஜ் வீட்டின் அருகில் பேச்சிமுத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் உலகராஜ் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒரு ஜோடி தங்க கம்மல், 2 தங்க காசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு வீடுகளிலும் கொள்ளையடித்தது ஒரே நபராக இருக்கலாம் என சந்தேகப் படுகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |