செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று சொல்வார்கள் இல்லையா ? நாங்கள் எதிர்க்கட்சி தான். நீங்கள் எங்களை இன்னும் ஆளும் கட்சியாகத்தான் நினைக்கிறீர்களா? திமுகவை ஆளும் கட்சியாக நினைக்கவில்லை போல. எங்களை பற்றியே தான் பத்திரிகைகள், ஊடகங்கள் சுற்றிக்கொண்டே இருந்து கேள்வி கேட்டுக்கொண்டு வருகிறீர்கள்.
இன்றைக்கு மதுரையில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. குண்டும் குழியுமாக இருக்கிறது. மக்கள் மிகவும் துயரபடுகிறார்கள்.அதை பற்றி யாராவது பேசுகிறீர்களா?” என்று பதிலுரைத்தார்.பின்னர் செய்தியாளர்களில் ஒருவர், “உங்களுடைய ஒருங்கிணைப்பாளருடைய கருத்தும், இணை ஒருங்கிணைப்பாளருடைய கருத்தும் வேறுபட்டு காணப்படுகிறது. கட்சிக்குள்ளேயே இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகிறது” என்று கூறினார்.
இதற்கு “இணை ஒருங்கிணைப்பாளர் இதை பற்றிப் பேசவே இல்லை. நீங்களாக கற்பனை செய்யக்கூடாது. இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சொன்ன பிறகு ஒன்றுமே பேசவில்லை. அதை பற்றி பேசவில்லை. அவருடைய கருத்தை பதிவு பண்ணுகிறார். அனைவரும் கலந்துகொண்டு பேசுவதுதான் இன்றைக்கு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அவர் என்ன இன்றைக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது. நகர்புற தேர்தல் வர இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கழகத்தை எப்படி வழிநடத்துவது? என்ன செய்வது? என்பது கழகத்தினுடைய தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்.
இதில் என்ன தவறு. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று அவர் சொன்னது என்ன தவறு என்று நான் சொல்கிறேன். கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அவர் ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். புரியாமல் ஊடகங்களில் மற்ற தலைவர்களை ஏதோ கருத்துக்களை பரிமாறி இருக்கிறார்கள்.இப்போது எவருமே அந்த கருத்துக்களுக்கு பதில் செல்ல விரும்பவில்லை. பத்திரிகை எங்களை நீங்கள் துப்பறிவதை விட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.