Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற போட்டிகள்….. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்….. அதிகாரிகள் வழங்கிய சான்றிதழ்கள்…..!!

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டான சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டரான மூக்கன், சப்- இன்ஸ்பெக்டரான அசோக்குமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |