Categories
உலக செய்திகள்

அழுகிய சடலத்துடன் வாழ்ந்த சிறுவர்கள்…. பின்னணி என்ன….? பிரபல நாட்டில் கொடூர செயல்….!!

அமெரிக்காவில் இறந்த உடலுடன் 3 சிறுவர்கள் தனியாக வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 3 சிறுவர்கள் அழுகி உருக்குலைந்த சடலத்துடன் ஆதரவின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறந்த சிறுவன் யார்..? அவனை கொலை செய்தது யார்..? என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து டெக்சாஸ் மாகணத்தில் வாழும் சிறுவன் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவனது வீட்டுக்கு சென்றனர். அந்த வீட்டில் 3 சிறுவர்கள் தனிமையில் வாழ்ந்து வருவதை போலீசார் கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி, அந்த வீட்டில் மற்றொரு சிறுவனின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில், Gloria Y. Williams (35) என்ற பெண்ணும் மற்றும் அவரது காதலன் Brian W. Coulter (31) ஆகிய இருவரும் இருந்துள்ளனர். இதில் Gloria-வின் மகனான Kendrick Lee (8) என்ற சிறுவனை Coulter அடித்து கொலை செய்து உடலை ஒரு பெட்டிக்குள் வைத்துள்ளனர். பின்னர் மற்ற பிள்ளைகளான Jordan Lee (15), Trevon Lee (10), மற்றும் Ja’Veon Kirklin (7) ஆகியோரை அதே வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் வேறொரு வீட்டில் வசித்தனர்.

இதனை தொடர்ந்து கொலை செய்த தம்பதியரை தேடியபோது, நூலகம் ஒன்றில் Gloria-வின் மகன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை படித்து கொண்டிருந்த போது போலீசார் கைது செய்தனர். மேலும், குழந்தைகளை ஆதரவின்றி விட்டு சென்றதாக Gloria மீதும், Kendrick-ஐ அடித்து கொன்றதாக Coulter மீதும் குற்றம் சாட்டப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |