Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. உரிமையாளர் மீது வழக்குப் பதிவு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளரின் தாய் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செல்வகணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை வாங்கி தன் கடைக்கு பின்னால் இருக்கும் குடோனில் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் மின்கசிவு காரணமாக பட்டாசுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அருகாமையிலிருந்த பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து சிதறி அடுத்தடுத்த மூன்று கடைகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.

இதில் செல்வகணபதியின் தாய் உள்பட 6 நபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் செல்வகணபதி உள்பட 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் அரசு தடை விதித்த நாட்டு வெடிகள் அதிக அளவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதிய பாதுகாப்பு வசதி இன்றி அதிக அளவில் பட்டாசுகளை சேகரித்து விபத்திற்கு காரணமான சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |