போலியான ஆவணத்திற்கு பத்திரப்பதிவு செய்த காரணத்திற்காக சார்பதிவாளரை பத்திரப்பதிவு துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி சஞ்சீவனூர் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சஞ்சீவனூர் கிராமத்தில் தங்களது பெயரில் கூட்டுபட்டாவாக இருக்கும் விவசாய நிலத்தில் ஒரு பகுதியை தனிநபர் தயாரித்த பத்திரத்தை சார்பதிவாளர் எந்த ஒரு மூல அரசு ஆவணங்களையும் சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர் போலி பத்திரம் தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் புகாரை மாநில பத்திரப் பதிவுத் துறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன்பின் போலியான ஆவணங்களின் மூலமாக சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்வதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் மாநில பத்திரப்பதிவு துறை அதிகாரியான சிவன் அருள், சார்பதிவாளராக பணியாற்றிய உமாபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.