அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை பல மணி நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு உள்ளே சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அலறி அடித்து வெளியே சென்றுள்ளனர். அன்பின் இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்த போது அவை தப்பி சென்று அலுவலகத்தின் மேற்கூரை ஓடுகளில் நுழைந்து மறைந்து கொண்டுள்ளது. இதனால் அலுவலகத்தின் மேற்கூரையை பிரித்தால் தான் பாம்பை பிடிக்க முடியும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல மணி நேரம் தேடியும் தீயணைப்பு வீரர்களுக்கு பாம்பு கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.