துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மூலமாக தனவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் தானாகவே முன்வந்து உதவிகளை செய்வார்கள். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் சிறப்பாக நடக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான வாய்ப்பு இன்று கிடைக்கும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாக அமையும். அனைத்து காரியங்களும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்.
அக்கம் பக்கத்தினரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று கொடுக்கல் வாங்கல்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நிதி மேலாண்மை உயர்வதால் நீங்கள் சேமிக்கக் கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். காரிய வெற்றிக்கு அதுபோதும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபடுங்கள். அதேபோலவே விநாயகரையும் நீங்கள் மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்