விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் அமையும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். அதனால் கைமாற்றாக பிறரிடம் கடன் வாங்க நேரிடும். இன்று பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலையும் சந்திக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். இருந்தாலும் கோபத்தின் காரணமாக சில வீண் பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். பொறுமையை கையாண்டாலே இன்றைய நாள் நீங்கள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அன்றைய வேலைகளை அன்றைய தினத்திலேயே முடித்துவிடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். மீண்டும் ஒருமுறை பொறுமையை மட்டும் கையாளுங்கள். குடும்பத்தாரிடம் பேசும் பொழுது மிகவும் நிதானமாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவானை மனதார நினைத்து வழிபடுங்கள். விநாயகரையும் வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்