Categories
உலக செய்திகள்

பொருளாதரா தடை விதிக்கப்படுமா….? ஏவுகணைகள் வாங்கும் இந்தியா…. வேண்டுகோள் விடுக்கும் அமெரிக்கா எம்.பிக்கள்….!!

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்று அமெரிக்கா எம்.பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரஷ்யாவிடமிருந்து S 400 வகை ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது. இதனால் அவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டு எம்.பிக்கள் சிலர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் “ரஷ்யாவிடமிருந்து  S 400 வகை ஏவுகணைகளை பாதுகாப்பிற்காக இந்தியா வாங்க கடந்து 2018 ஆம் ஆண்டே ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது. இதற்கான தொகையையும் வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் இந்தியா செலுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு குழப்பத்தை விளைவித்தது. ஆகவே ரஷ்யாவுடன் எந்த நாடுகள் ஒப்பந்தங்கள் செய்து கொண்டாலும் அவற்றின் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இயற்றப்பட்ட அமெரிக்கா எதிரிகள் தொடர்பான பொருளாதார சட்டம் வாயிலாக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும்.

ஆனால் அவ்வாறு இந்தியா மீது தடை விதிக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்கா எம்.பிக்கள் சிலர் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது தான் அமெரிக்கா தேசிய நலனுக்கு நல்லது எனவும் கூறியுள்ளனர். குறிப்பாக 3.4 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இந்தியா ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுடன்  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

Categories

Tech |