தனுசு ராசி அன்பர்களே..!! இதுவரை இல்லாத அளவுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சல் பிறக்கும். வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும். நண்பர்கள் உதவி நன்மையை கொடுக்கும். இன்று சுகமான தூக்கம் வரும். பண வரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்றைய நாள் அளவற்ற மகிழ்ச்சியில் திகழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும்.
அதே போல மற்றவர்களின் ஆதரவையும் பெற்று முக்கியப் பணியையும் நிறைவேற்றுவீர்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடும். இன்று திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் மென்மேலும் நீங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற முடியும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு செய்யுங்கள். விநாயகரையும் நீங்கள் மனமார வழிபட்டு இன்றைய நாளை மென்மேலும் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்