உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது.
நேபாளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கஜேந்திர பகதூர் ஹமால். இவர் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சராக பதவியேற்று மூன்றே நாட்களில் அதனை ராஜினாமாவும் செய்தார். ஏனெனில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பகதூரின் உறவினரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான சொலேந்திரா ஷம்செர் ராணா தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்பொழுது பகதூர் அவர்களுக்கு இடமளிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்த குற்றத்திற்காக அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ராணா பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் நீதித்துறையினரின் கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.