Categories
உலக செய்திகள்

புதிய கொள்கை உருவாக்கம்…. செயற்குழு தலைவராக பௌத்த மதக்குரு நியமனம்…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு….!!

புதிய கொள்கையின் செயற்குழு தலைவராக பௌத்த மதக்குரு நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நேற்று முன்தினம் அதிபர் கோத்தபய ராஜபக்ச உருவாக்கினார். மேலும் அதனை அமல்படுத்துவதற்கான பணிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியை அமல்படுத்துவதற்கான செயற்குழு தலைவராக பௌத்த மதகுரு மற்றும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான கலகொட அத்த ஞானசார தேரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரை நியமித்தது அனைவரிடமும்  பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர் 2013 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மத கலவரத்தை தூண்டியதாக கலகொட மீது குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |