Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க …. 3 நாள் இலவச ஆன்லைன் யோக பயிற்சி ….ஈஷா அறிவிப்பு …!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள் இலவச ஆன்லைன் யோகா பயிற்சியை ஈஷா நடத்த உள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா பயிற்சி மையம் ‘உயிர்நோக்கம்’ என்ற பெயரில் யோகா வகுப்பு ஆன்லைன் முலம் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மக்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது. இந்த யோகா பயிற்சி 6:30 மணி முதல் 8 30 மணி வரை, மதியம் 11 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ஆகிய மூன்று வேளைகளில் தினமும் 2 மணி நேரம் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்ளலாம். இந்த யோகா பயிற்சியை தினமும் செய்து வந்தால் முதுகுதண்டு வலுப்பெறும், மூட்டுவலியிலிருந்து விடுபடலாம், மன அழுத்தம் குறையும் மற்றும்  உடல் ஆரோக்கியம் கூடும். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு isha.co/uno-pb என்ற  இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு நவம்பர் 5ஆம் தேதி இரவு 9 மணி வரை செயல்படும். மேலும் இது குறித்து கூடுதல் தகவலுக்காக 7383673836 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யலாம் என்று யோகா பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |