அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறைச்சிகளை பேக்கிங் செய்யக்கூடிய 269 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு 80% இறைச்சி தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
அதில், இதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட விவரங்களை விட மூன்று மடங்கு அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி 59,000 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 269 பேர்பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.