சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், ஹரிசங்கர், ஹரிநாராயணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாகசைதன்யாவும் 2 புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.