Categories
ஈரோடு சேலம் மாவட்ட செய்திகள்

சோகம்… கார் மீது வேகமாக மோதிய லாரி… மருத்துவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலி..!!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரசு பெண் மருத்துவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..

சேலம்  மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் அரசு மருத்துவர் ஆவார். தனது கணவன் தேவநாதனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் உள்ள தனியார் கிட்னி மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது காடப்பநல்லூர் பகுதியில் வந்தபொழுது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி அதிவேகமாக வந்த லாரி இடது பக்கம் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இந்திராணி அவர் கணவர் தேவநாதன், மற்றும் அவர்கள் உடன் வந்த உறவினர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தலைமறைவான நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்தினால் மேட்டூர் பவானி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |