அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டை மாவட்டம் எருமேலி அருகே உள்ள பள்ளிபாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடுகளில் இருந்தவர்கள் ஏற்கனவே நிவாரண முகாமுக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்ட நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கோட்டையம், ஆலப்புழா மற்றும் இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.