Categories
தேசிய செய்திகள்

தீபாவளி, புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் தீபாவளி,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க மாநில ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை மற்றும் புத்தாண்டு தினங்களில் இரண்டு மணி நேரம் வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே கொரோனா காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட், மாநிலத்தில் நிலவிவரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது பட்டாசு விற்பனை செய்யவும் பட்டாசுகள் வெடிக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

Categories

Tech |