செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், அரசியல் கணக்குகளை நீ போடுகிறாய் உன்னைப் பார்த்து எழுதியவர்கள் மதிப்பெண் பெறுகிறார்கள். நீ வந்து கணக்கு போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்குற….
மற்றவர்கள் காப்பி அடித்து மார்க் வாங்கிகொண்டு போகிறார்கள். மாவட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் கொடி பிடித்தவர்களை மற்ற கட்சியுடைய மாவட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் கொடி பிடித்தவர்களை மாவட்டமாய், ஒன்றியாமாய் மாற்றிய ரசவாதம் உன்னுடையது. இப்போ உங்களை பார்த்து எல்லாரும் வாங்க மாவட்டம், வாங்க ஒன்றியம் என்று கூப்பிடுகிறார்கள்.
கொடி கட்டிய வண்டிக்கு கும்பிடு போட்டவர்களை கொடிகட்டிய வண்டியில் வலம் வர வைத்தது நீ தானே. மற்றவர்கள் யாராவது கொடி கட்டிய வண்டியில் போகும்போது ஐயா சாமி வணக்கம் என்று போட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் இன்று கொடி கட்டி வலம் வர வைக்கிறாய் வண்டிகளில், வாசலில் நின்றவர்களை நீதானே நாற்காலியில் உட்கார வைத்தாய்.
அடித்தவனையே அழ வைக்கிற அறம் உன்னுடையது. அவனை ரியலைஸ் பண்ண கூடிய அளவிற்கு அவனே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு அழ கூடிய அளவிற்கு பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், அறத்தை கடைபிடிக்கக் கூடிய பண்பு உன்னுடைய பண்பாக இருக்கிறது என்று அந்த இடத்திலேயே அவர் பதிவு செய்கிறார் என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கவிதை தொகுப்பில் உள்ளவற்றை சொல்லி காட்டி பேசிய திருமாவளவன், இதய துடிப்பை போல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்கிறாய் ஜனநாயகம் சமத்துவம் செழிப்பதற்க்காக, இதயத் துடிப்பு என்பது வந்து ஒரு வினாடி நின்றால் கூட நம் கதை முடிந்துவிடும். ஒரு வினாடி கூட ஓய்வில்லாமல் உழைப்பதால் இதயத்துடிப்பை போன்ற அதோடு ஒப்பிடுகிறார்.
அதில் என்ன பாருங்கள் ? ஒரு நொடிக்கு ஒரு துடிப்பு இல்லை, இதயம் வந்து ஒரு நொடிக்கு பல துடிப்பு, ஒரு நொடிக்குள்ளேயே 3,4 துடிப்பு துடிக்கும். ஏனென்றால் சராசரி ஒரு மனிதனுக்கு ஒரு நொடியில் 72 துடிப்புகள் இருக்கவேண்டும் நாடி துடிப்பு, அப்போ அதிகமாகத் துடிக்கனும் இதயம், ஒரு வினாடி ஒரு தடவை துடித்தால் மொத்தம் 60 துடிப்பு தான் வர வேண்டும்.
ஆனால் நமக்கு நாடித்துடிப்பே 72 இருக்கனும் அப்பதான் நம்ம நார்மலா இருக்கோம் என்று அர்த்தம். அதைவிட அதிகமாக இதயம் துடிக்குது அப்போ ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல் நீ உழைத்துக்கொண்டு இருக்கிறாய் என்பதற்காக அவர் ஒப்பீடு செய்வது இதயத்துடிப்பை போல் என்று சொல்கிறார் என திருமா நெகிழ்ச்சி அடைந்தார்.