Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் முதல் முறையாக பக்கத்து நாடுகளுடன் ஆலோசனை!”.. பொருளாதாரத்தை மீட்க விவாதம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்து சுமார் 75 நாட்களுக்கு, பின் முதல் தடவையாக பக்கத்துக்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

தலீபான்கள், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று காபூல் நகரை கைப்பற்றி, அதன் பின்பு, ஆப்கானிஸ்தானில் புதிதாக இடைக்கால ஆட்சியை அமைத்துவிட்டனர். இம்முறை தலிபான்கள் நன்றாக ஆட்சி செய்வோம் என்று கூறினாலும், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை தரும் தீர்மானத்தில் மட்டும் சிறிதும் மாறவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பக்கத்து நாடுகளின்  வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. பாகிஸ்தான், சீனா, துர்க் மேனிஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த  வெளியுறவு அமைச்சர்கள் நேரடியாக மற்றும் காணொலி காட்சி மூலமாக இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பில், தலிபான்களின் மூத்த தலைவரான அகமதுல்லா வாஷிக் கூறியுள்ளதாவது,  இவ்வாறான சந்திப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். அதனை ஆதரிக்கிறோம். ஏனெனில்,  ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலையில் பக்கத்து நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதும், நட்புறவை தொடர்வதும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |