செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி விட்டது. பொதுவாக மீனவர்களுக்கு அந்த எல்லை என்பது கிடையாது. தெரிந்தோ, தெரியாமலோ காற்றின் வேகம், மீன் பிடிக்கின்ற ஆர்வம் அதன் காரணமாக போகும்போது அவர்களை இந்தியாவில் ஒப்படைப்பது தான் ஒரு சிறந்த பண்பு.
ஆனால் மாறாக மீனவர்களை அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, படகு உடைப்பது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது, சிறையில் அடைப்பது இது போன்ற கொடுஞ்செயல்கள் எல்லாம் அம்மாவுடைய அரசு காலத்திலேயே வெகுவாகக் குறைக்கப்பட்டது. காரணம் என்னவென்று சொன்னால் இரண்டு நாட்டு மீனவர்களுடைய கருத்துக்கள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை மூன்று முறை நடந்தது. நான்காவது முறை நடக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதனால் திமுக அரசாங்கம் முயற்சி எடுத்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களும் ஒரு சுமுகமாக மீன் பிடிக்கின்ற வகையில் ஒரு தீர்வு ஏற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு பொறுப்பேற்று 4 மாதம் ஆகிவிட்ட சூழ்நிலையில் மீனவர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படுவது மிகவும் வேதனையும் கண்டனத்திற்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ன கீழ நடக்குது ? கடலில் என்ன நடக்குது ? மீனவர்கள் எந்த அளவிற்கு தாக்கப்படுகிறார்கள் என்று தெரியாமல் கூட ஒரு அறிக்கை விடுவதுதான் ஒரு பெரிய வினோதமாக இருக்கிறது. கோட்டை பட்டினத்தில் இருந்து சமீபத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ராஜ்கிரன் என்ற மீனவன் இலங்கையினுடைய கடற்படை கப்பல் மோதி படகு மூழ்கடிக்கப்பட்டு, இருவர் காப்பாற்றப்பட்டு, ராஜ்கிரன் வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் உடலை பொறுத்தவரையில் இரண்டு மணிக்கே கிடைத்துவிட்டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கின்ற திரு மு.க. ஸ்டாலின் அறிக்கை விடும் போது ராஜ்கிரண் உடலை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று ஒரு அறிக்கை விடுகிறார். அதனால் எப்படிப்பட்ட ஒரு நிலைமை… ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒரு அறியாமையினுடைய வெளிப்பாடுதான் இவருடைய அறிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.