செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது என்ன சொன்னாரு ? ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார். இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு இருக்கின்ற மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார். இப்போ ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே அதுவும் இன்று கொடுக்காமல் 10 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து இருக்கிறார்.
எங்களை பொறுத்தவரையில் 20 லட்ச ரூபாய் நாங்கள் மீனவர்களுக்கு குடும்பத்திற்கு கொடுத்த நிலையில், இன்று 10 லட்ச ரூபாய் கொடுத்து இன்றைக்கு ஒரு கண்துடைப்பிற்க்காக ஒரு கண்டனம் கூட கடுமையான அளவிற்கு இலங்கை அரசுக்கு தெரிவிக்கவில்லை, மத்திய அரசுக்கு கூட எந்தவிதமான அழுத்தமும் கூட கொடுக்கவில்லை.
மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தமிழ்நாடு அரசு பெரிய அளவிற்கு கண்டனம் கொடுத்து, இது போன்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு ஒரு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பது தான் ஒரு அரசாங்கத்தினுடைய கடமை. அந்த கடமையில் இருந்து முற்றிலுமாக தவற விட்டுவிட்டார்.
பெரிய அளவிற்கு அறியாமையின் வெளிப்பாடாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்…. பொதுவாகவே மீனவர்கள் வந்து விசைப் படகில் மீன் பிடிப்பது வழக்கம் ஆனால் இந்த அறிக்கையில் கப்பல்ல போய் மீன் பிடித்தார்கள் என்று வருது. எப்படி இருக்குன்னு பாருங்க. கப்பலில் எந்த காலத்தில் மீனவர்கள் மீன் பிடித்தார்கள், கப்பல்ல மீன் பிடிப்பது கிடையாது.
எல்லாருமே நாட்டுப்புற படகு, என்ஜின் பொருத்தப்பட்ட கட்டுமரங்கள், எஞ்சின் பொருத்தாத கட்டுமரங்கள், சிறிய விசைப்படகுகள், பெரிய விசைப்படகுகள் இதுதான். ஆனால் இது வந்து ஒரு முழுமையாக ஒரு சிஎம்க்கு எடுத்து சொல்லாத ஒரு துறை, சிஎம்கே எடுத்துச் சொல்லாத செயல்படாத ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பது தான் இன்றைக்கு வந்து மிகவும் வேதனை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.