Categories
தேசிய செய்திகள்

குறும்புக்கார மாணவன் ….மாடியில் தலைகீழாக தொங்க விட்ட தலைமையாசிரியர்….பின் நடந்தது என்ன …!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சேட்டைக்கார மாணவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியரை காவல்துறை கைது செய்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மீர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ் என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டதால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா சிறுவனை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தச் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் சோனுவை மேல் மாடிக்கு இழுத்து சென்று மன்னிப்பு கேட்காவிட்டால் மாடியில் இருந்து கீழே போட்டு விடுவதாக கூறி அவனது ஒரு காலை பிடித்து மாடியிலிருந்து தொங்கவிட்டு மிரட்டினார்.அதன்பிறகு அந்தச் சிறுவன் அழுகை சத்தத்தை கேட்டு வந்த குழந்தைகள் கூடிய பிறகு சோனுவை தலைமையாசிரியர் விடுவித்தார். இதையடுத்து புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால் தலைமை ஆசிரியரை சீறார் நிதி சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு சிறுவனின் தந்தை ரஞ்சித் யாதவ் “தலைமை ஆசிரியர் செய்தது தவறுதான், ஆனால் ஆசிரியர் அன்பினால் செய்தார். இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். மேலும் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் மனோஜ் விசுவகர்மா கூறியதாவது, “சோனு ரொம்ப குறும்புக்காரன் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களையும் கடிக்கிறான் என்று அவனுடைய அப்பா அவனை திருத்தச் சொன்னார். அதனால்தான் அவனை பயமுறுத்துவதற்காக மேல்தளத்தில் இருந்து தலை கீழாகத் தொங்க விட்டேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |