Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…. 79 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களின் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ள நிலையில்  24 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மூன்று நபர்கள் காணாமல் போனதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |