Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகி 11வருஷம் ஆகுது…! 2022இல் இனி என்ன கவலை ? கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது …!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கேஆர்எஸ் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் காவிரி பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக கேஆர்எஸ் அணை விளங்கிவருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டமும், கேரள மாநிலம் வயநாடு மாவட்டமும், உள்ளன. கேஆர்எஸ் அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் முழு கொள்ளளவை எட்டும். ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் தாண்டியும் முழு கொள்ளளவை எட்டாமல் இருந்தது.

இதனால் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெங்களூரு, மாண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்து வந்தன.

இந்நிலையில் விவசாயிகளின் கவலையைப் போக்க கர்நாடகத்தில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை கை கொடுத்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வந்தவண்ணம் உள்ளது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் முழு கொள்ளளவை கேஆர்எஸ் அணை எட்டியது. இதனால் அணையில் கடல் போல தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

Categories

Tech |