Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கருத்தால் குழப்பம்….! தனித்தனியாக செல்லும் OPS, EPS ? செல்லூர் ராஜீ விளக்கம் …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயிடம் செய்தியாளர்களில் ஒருவர், “கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் அண்மையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கருத்து அதிமுகவில் சர்ச்சையாகி உள்ளது? எனவே  நாளை நடக்ககூடிய மாலை அணிவிப்பில் இருவரும் ஒன்றாக வருவார்களா? இல்லை தனித்தனியாக வருவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  அவர், “எப்பொழுதுமே ஒன்றாகத்தான் மாலை அணிவிப்பது வழக்கமாகும்.  நீங்களாக கற்பனைக்கு சொல்கிறீர்கள். எல்லாரும் பத்திரிகை, ஊடகங்கள் பொதுவாக வந்து ஆளும் கட்சியில் ஏற்படுகின்ற தவறுகள்….  இன்னைக்கு ஆளும் கட்சிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றயதை பற்றி தான் வழக்கமாக பத்திரிகைகளும் ஊடகங்களும்  பேசுவது உண்டு.

ஆனால் அவர்கள் அதை விட்டுவிட்டு அதிமுகவில்  என்ன நடக்கிறது என்று நீங்கள் துப்பறியும் வேலை பாக்குறீர்கள். எப்போதுமே  அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வந்து தான் மாலை அணிவித்துவிட்டு செல்வார்கள். கடந்த நான்காண்டுகளாக இதனை செய்து வருகிறார்கள். இதற்குமுன் அம்மா வரும்போதும் கூட இதைத்தான் செய்து இருக்கிறோம். பிறகு எதற்கு புதுசாக கேள்வி கேட்குறீர்கள். அது போல்தான் எப்பொழுதுதான் செய்வோம். இதனால் சர்ச்சையே இல்லை. நீங்களாக சர்ச்சையை உருவாக்கி விட்டீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |