உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைத்தலையூர் பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தற்போது பேச்சியம்மாள் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பேச்சியம்மாள் வீட்டை பூட்டி விட்டு சாவியை உள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பீரோ இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து பேச்சியம்மாள் கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பேச்சியம்மாளின் உறவினரான அதே பகுதியில் வசிக்கும் மரிய அஸ்வினி மற்றும் அவரது கணவரான சிவாகண்ணன் ஆகியோர் நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவரிடமிருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.