டிரைவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சேயாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜன் மகன் மணிகண்டன், உள்ளமுடையார் ஆகியோர் அங்கு வந்து அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் மண்கண்டன் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.400-ஐ பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மணிகண்டன், உள்ளமுடையார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்