நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் கொரோணா பரவும் அபாயம் இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சரவெடிக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சரவெடி உற்பத்தி செய்யவும், விற்கவும், வெடிக்கவும் கூடாது. தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கபட்டால் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.பட்டாசு தொடர்பான இந்த உத்தரவை மாநில அரசுகள் ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் விளம்பரப்படுத்தவும், நீதிமன்ற ஆணையை அனைத்து மாநில அரசுகளுக்கும் கட்டாயம் கடைபிடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.