Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக களமிறங்கும் கார்த்தி, ஜோதிகா… வெளியான சூப்பர் தகவல்…!!!

கார்த்தி, ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் நடிகைகள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாற ஆசைப்படுவார்கள். அதன்படி சாவித்திரி, விஜயநிர்மலா பானுமதி உள்ளிட்டோர் இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர். இப்போது உள்ள நடிகர், நடிகைகளில் சிலருக்கு மட்டும் தான் படம் இயக்கும் ஆசை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karthi and sister-in-law Jyothika to play siblings in their next with  director Jeethu Joseph - Bollywood News & Gossip, Movie Reviews, Trailers &  Videos at Bollywoodlife.com

இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகர் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் இவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருக்கிறார். இவரும் விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படங்களை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |