Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…. தமிழகத்தில் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதனால் தமிழகத்தின் ஐந்து ஒன்றியங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம்,மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |