செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும், ஆட்சியில் இல்லாத போது ஒன்றும் பேசுவார்கள். ஆட்சியில் இல்லாதபோது வீரவசனம் பேசுவார்கள். ஆ ஊ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள். இதே எங்களுடைய அம்மாவுடைய அரசில் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டு… அதாவது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர் சில ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேற்கொண்டதற்கு பெரிய அளவிற்கு ஆளுநர் மீதான விமர்சனங்கள்…. அதேபோன்று ஆளுநர் வந்து போகிற இடங்களிலெல்லாம் கருப்புக்கொடி காட்டி அந்த அளவிற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்ந்தவர்கள்.
எனவே இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநர் தன்னுடைய நடைமுறையாக பொதுவாகவே அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் அளித்தபடி அவர்கள் எந்த ஒரு கேள்வியும் சரி அதேபோன்று எந்தவொரு அதிகாரியையும் அழைக்கலாம். தமிழ்நாட்டினுடைய நிலைமையை பற்றி கேட்கலாம். அவருக்கு அதிகாரம் உண்டு.அந்த அதிகாரத்தின் படி அவர் வந்து தனது அதிகாரத்தைச் செலுத்தும் போது முன்பு கூச்சலிட்டவர்கள் இப்பொழுது பம்மிட்டு, பயந்துட்டு அப்படியே கை கட்டி நிற்க வேண்டும் சொல்லுங்கள்.
ஆனால் தன்னுடைய கட்சியினுடைய செய்தி தொடர்பாளர் திரு இளங்கோவனை விட்டு நியாயப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் தன்னுடைய தோழமை கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் அதே போன்று சில கட்சிகளை கொண்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனம். எப்படிப்பட்ட ஒரு ஒரு இரட்டை நிலை… ஒரு இரட்டை வேடம்… ஒரு பெரிய அளவிற்கு ஆட்சியில் இருக்கும்போது ஒன்று ஆட்சியில் இல்லாதபோதும் என்ற நிலை.
ஒரு பச்சோந்தி தான் பொதுவாகவே நிறத்தை மாற்றிக் கொள்ளும். அந்த சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி. அது போல திராவிட முன்னேற்றக் கழக அரசும் சரி , திமுகவும் சரி கடந்த காலங்களில் தமிழ்நாட்டுடைய நிலைமைகளை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தீர்க்கப்படாமல்…. காலத்துக்கு ஏற்ப மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில உரிமைகளை விட்டுக் கொடுப்பது…. வாயளவில் சொல்வது உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் அது வாயில தான், எதுவுமே கிடையாது.
அதே மாதிரி சொல்வது ஒன்று அதை நடைமுறையில் செய்வது என்று சொன்னால் ஒரு பச்சோந்தி தனமாகத்தான் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சரி, திமுக அரசையும் பார்க்க முடிகிறது என முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்தார்.