வாலிபர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அருண் பிரசாத் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சந்தோஷ்குமார் என்ற மற்றொரு இளைஞர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ்குமார் காதலிக்கும் பெண்ணிற்கு அருண்பிரசாத் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த சந்தோஷ்குமார் ஆத்திரத்தில் அருண்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் சந்தோஷ்குமார் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருண் பிரசாத்தை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அருண் பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்த அருண் பிரசாத் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்தொஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.