பிக்பாஸ் 5 யில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனிலிருந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் எலிமினேஷன் ஆகியுள்ளனர். இதனையடுத்து, இந்த வாரம் சின்னப்பொண்ணு அல்லது அபிநய் வெளியேற இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. இவருக்கு ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் கொடுப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில், இவரை விட அபிநய்க்கு ஒரு வாரத்திற்கு 2.75 லட்சம் சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் போட்டியாளர்களில் நிறைய சம்பளம் வாங்குவது இவர்தான் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.