Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் கார் மோதல்…. உரிமையாளர் அளித்த புகார்….. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனம் மோதி கார் சேதமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியப்பட்டி கிராமத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார். அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் காரை நிறுத்திவிட்டு திருமூர்த்தி பட்டாசு வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் செல்வக்குமாரின் இரு சக்கர வாகனம் திருமூர்த்தியின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. இது குறித்து திரு மூர்த்தி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |