தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இவரின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு திரைப்பட குழுவினருடன் இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்களால் நாம் இன்றுவரை நசுக்கப்பட்டு வருகிறோம். இதனால் மத்திய அரசு தேசிய விருது கொடுத்தால் கூட அதனை தான் வாங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது மத்திய அரசு கொடுத்த தேசிய விருதை பெருமையுடன் பெற்றுக்கொண்டுள்ளார.2017ஆம் ஆண்டிலும் பாஜக அரசு தானே ஆட்சியில் இருந்தது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.