கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த 100-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் அளிக்க வில்லை. இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் தகுதிவுடைய எல்லாருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வலியுறுத்தியும் மற்றும் முறைகேடு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணியிடை நீக்கம் செய்து தலைவர் தேவநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறிப்பானை பின் வழங்கப்படும் என அவர் சரக துணைப்பதிவாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.