Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய கனமழை…! நிரம்பி வழிந்த அணைகள்…. மழையால் குளுமையான குமரி ..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அடையாமடையில் 7 செ.மீ ஆணை கிடங்கு மற்றும் குருந்தன்கோடு தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு மற்றும் இரணியல் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது. நாகர்கோவில் சுருளோடு, பாலமோர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 817 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 792 கன அடி நீரும், சிற்றாறு 1 அணைக்கு 1035 அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேச்சிப்பாறை அணையிலிருந்து 1635 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

Categories

Tech |