தேவையான பொருட்கள்:
முந்திரி பருப்பு ஒரு கப்
இஞ்சி பத்து கிராம்,
கடலைமாவு 2 கப்,
பச்சை மிளகாய்-4,
டால்டா 100 கிராம்,
சீரகப் பொடி கால் ஸ்பூன்,
தேவையான அளவு உப்பு.
செய்முறை:
முந்திரிப்பருப்பு, கடலைமாவு, டால்டா, சீரகப்பொடி ,உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி பக்கோடா ரெடி செய்து சாப்பிடுங்க சுவையை மறக்க மாட்டிங்க