Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணிக்கு சென்ற காவலர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி சிறைச்சாலை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய பெக்மான். இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடலூர் மத்திய சிறைச்சாலை பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் மருதாடு சோதனை சாவடி அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் ஆரோக்கிய பெக்மான் படுகாயமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆரோக்கிய பெக்மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |