Categories
உலக செய்திகள்

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக…. நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படம்…. எதிர்ப்பு தெரிவிக்கும் மதவாதிகள்….!!

 புகைப்பட கலைஞர் 200 பேரை வைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு இடையே சாக்கடல் அமைந்துள்ளது. இதற்கு உப்பு கடல் என்ற பெயரும் உண்டு. தற்பொழுது இந்த கடல் காலநிலை மாற்றத்தால் அளவில் சுருங்கி விட்டது. மேலும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுவிதமான புகைப்படத்தை நியூயார்க்கை சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்பவர் எடுத்துள்ளார்.

நிர்வாணமாக 200 பேரை வைத்து போட்டோஷூட்! காரணம் இதுதான்!!

இவர் சுமார் 200 ஆண்கள் மற்றும் பெண்களை ஆடையின்றி நீர்பரப்பில் நிற்க வைத்ததோடு மட்டுமின்றி அவர்களின் உடலில் வெள்ளை நிறச்சாயம் பூசப்பட்டு நிற்பதும் போலவும் புகைப்படத்தை எடுத்துள்ளார். இவரது முயற்சிக்கு மதவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dead Sea artwork by Spencer Tunick | About New7Wonders

இருப்பினும் இவருக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதாவது ‘சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது கடல் பரப்பு மிகவும் பெரிதாக இருந்தது. ஆனால் அதன் அளவு தற்போது சுருங்கி விட்டது’ என்பதை இதன் மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |