இந்தியாவில் பதிவுத் திருமணம் என்பது சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அது இந்து திருமணம், கிறிஸ்துவ திருமணம் மற்றும் இஸ்லாமிய திருமணம் என எதுவாக இருந்தாலும் அதனை பதிவு செய்வது கட்டாயம். திருமண பதிவு என்பது அரசு அதிகாரிகள் முன்பு நடத்தி வைக்கப்படுவது.திருமணம் எப்படி நடந்தாலும் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்கள் பதிவு மேற்கொண்ட அலுவலகத்தில் பெற முடியாது. அதாவது கிறிஸ்தவ திருமணம் நடந்த விபரங்கள் அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் பெறப்பட்டு சென்னையிலிருக்கும் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி கிறிஸ்தவ திருமண பதிவு படிப்புகளின் சான்றிட்ட நகல் இதுவரை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
அதனால் ஒவ்வொருவரும் சென்னைக்குச் சென்று திருமண பதிவு படிப்புகளை பெற்று வர வேண்டிய சூழல் நிலவியது. இதையடுத்து இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கிறிஸ்தவ திருமண உண்மை படிப்புகளை பெறுவதற்கு சென்னை வருவது குறையும். இதனை கருத்தில் கொண்டு திருத்தம் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டது.அந்த வகையில் இந்திய கிருஸ்துவ திருமணச் சான்றிதழின் உண்மை வழிகளை அந்தந்த மண்டல துணை பதிவுத் துறை அலுவலர் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் செய்யப் பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.