Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “சரவெடிக்கு தடை” மீறினால் இவர்கள் தான் பொறுப்பு…. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்….!!

நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலி பசுமை பட்டாசுகளை விற்பனை செய்தால் அதற்கு காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து வகை பட்டாசுகளுக்கும்  தடை விதிக்கவில்லை என்றும் நாடு முழுவதும் சரவெடிக்கு தடை விதித்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் அடுத்தவர் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்டோரின் உயிருடன் விளையாட ஒருபோதும் அனுமதிக்க இயலாது என அவர்கள் கூறினர். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்றும் அவ்வாறு செய்பவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பட்டாசுகள் எங்காவது வெடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |