Categories
உலக செய்திகள்

மக்களின் நலன் கருதி…. சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றம்…. இங்கிலாந்து அரசு நடவடிக்கை….!!

சிவப்பு பட்டியலில் இருந்து ஏழு நாடுகளை அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து அரசு கொரோனா தொற்று பரவலின் காரணமாக டோமினிக்கன் குடியரசு கொலம்பியா, ஈகுவேடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா போன்ற ஏழு நாடுகளையும்  சிவப்புப் பட்டியலில் வைத்திருந்தது. மேலும் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வணிக ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்த நிலையில் முழுமையான இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளைக் கருத்தில் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் பெயர்களை அகற்ற முடிவு செய்துள்ளது. மேலும் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அந்த ஏழு நாடுகளின் பெயர்களும் சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |