Categories
மாவட்ட செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சிக்கல்…. பாதிக்கப்படும் முறுக்கு வியாபாரம்…. வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்….!!

உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பரவியுள்ள மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் வாழ்வாதாரம் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசு உள்ளது. வழக்கமாகவே விறுவிறுப்பாக இருக்கும் முறுக்கு விற்பனை தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும். ஆடைகள் விற்பனையை போல மணப்பாறை முறுக்கு விற்பனையும் அதிகமாக இருக்கும். அந்த விற்பனையை வாழ்வாதாரமாக நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

அனைத்து தொழில்களையும் முடக்கி வைத்த கொரோனா. கடந்த இரண்டு ஆண்டுகளாக முறுக்கு தொழிலையும் முற்றிலுமாக நொறுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஊரடங்கு காலத்தில் கூட வீடுகளிலேயே மக்கள் முடங்கிக் இருந்ததால் நொறுக்குத் தீனிக்கு பயன்பட்ட முறுக்கின் விற்பனை ஓரளவுக்கு இருந்தது. ஆனால் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் இன்றி முறுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஓமப் பொடி, அரிசி முறுக்கு, கார முறுக்கு, அச்சு முறுக்கு, ராகி முறுக்கு, புதினா முறுக்கு, தேன்குழல் என பலவகையான முறுக்குகளை தயாரிக்கும் முறுக்கு உற்பத்தியாளர்களின் வாழ்வு பண மதிப்பிழப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு என ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பையே சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |