தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பல்வேறு துறை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி நேரங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், நகராட்சி, ஆடியோ அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறைகளின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி அரசு சோதனை நடத்தி வருகிறது. அதில் இதுவரை பல லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கட்டுக்கட்டாக பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.